
மலையாளத்தில் அறிமுகமாகும் மராட்டிய நடிகை
அவர் தற்போது அங்கமாலி டைரிஸ் மற்றும் க்ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அடுத்த படமான "மலைக்கோட்டை வாலிபன்" படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகிறார். இப்படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார்.
இது குறித்து சோனாலி கூறியதாவது: இது நான் எதிர்பார்க்காத ஒன்று. தென்னிந்திய சினிமாவுக்கு செல்வேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். சமீபகாலமாக லிஜோவின் படங்களை கவனித்து வருகிறேன். மோகன்லாலை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகத் தெரியும். இவர்களோடு இணைவது எனக்கு பெரிய கவுரவம்.
சினிமாவின் மாநில எல்லைகள் மறைந்து நாம் அனைவரும் இந்தியத் திரைப்படத் துறையாக அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இந்த படம் பீரியட் டிராமா. இதற்காக தற்போது ஒர்க்கவுட் செய்து வருகிறேன். இதுகுறித்து மோகன்லாலிடம் பேசினேன். அவர் மலையாளம் கற்றுக் கொள்ளச் சொன்னார். அதையும் செய்ய இருக்கிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!