
கேஜிஎப் 2 வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த பதான்
"பதான்" படத்தின் இந்திய வசூல் தற்போது 446 கோடியைத் தாண்டியுள்ளது. "கேஜிஎப் 2" படத்தின் வசூல் 430 கோடி. "பாகுபலி 2" படத்தின் வசூலை முறியடிக்க "பதான்" படத்திற்கு இன்னமும் 64 கோடி தேவை. அந்த வசூலை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ்ன் நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி உலக அளவில் "பதான்" படம் 865 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் நிகர வசூலாக 446 கோடியும், மொத்த வசூலாக 536 கோடியும் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் 329 கோடி வசூலைப் பெற்றுள்ளது என அறிவித்துள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!