
பாய்காட் சர்ச்சையை சமாளிக்குமா பிரம்மாஸ்திரா ?
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே "பாய்காட் பிரம்மாஸ்திரா" என்ற டிரெண்டிங் டுவிட்டர் தளத்தில் பரபரப்பாக உள்ளது. பாலிவுட்டில் அடுத்து அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ள அந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மவுனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
அடுத்த வாரம் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் கரண் ஜோஹர் ஒருவர். அவர், ரண்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் சுஷாந்த் சிங் தற்கொலை நிகழ்விலிருந்தே "நெப்போட்டிசம்" சர்ச்சையில் சிக்கியவர்கள். கரண் ஒரு தயாரிப்பாளராக இருந்த "லைகர்" படம் "பாய்காட்" எதிர்ப்பு அலையில் சிக்கி சின்னா பின்னமானது. அந்தப் படத்தின் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா சுயமாக முன்னேறியவர். அவருடைய படத்திற்கே அந்த கதி என்றால், "நெப்போட்டிசம்" சர்ச்சையில் சிக்கிய கரண், ரண்பீர், ஆலியா ஆகியோர் இணைந்துள்ள "பிரம்மாஸ்திரா" படம் எப்படி தப்பிக்கப் போகிறது என பாலிவுட்டில் கவலையுடன் உள்ளார்கள்.
சமீபத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் "என்னைப் பிடிக்கவில்லை என்றால், என் படத்தைப் பார்க்காதீர்கள்,” என ஆலியா பட் அளித்த பேட்டி காரணமாக இன்று "#आलिया_My_Foot” என ரசிகர்கள் கோபத்துடன் விமர்சித்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!