
லால்சிங் சத்தா தோல்வி : சம்பளத்தை விட்டு கொடுத்த அமீர்கான்
கடந்த மாதம் 11ம் தேதி வெளிவந்த இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதுவரை 50 கோடி கூட வசூல் செய்யவில்லை என்கிறார்கள். இந்தியாவின் சகிப்புத்தன்மை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமீர்கான் பேசி இருந்தார். இதனை சுட்டிக்காட்டி உருவான பாய்காட் லால்சிங் சத்தா என்ற ஹேஸ்டேக்தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒப்பந்தபடி தனக்கு பேசப்பட்ட சம்பளம் 100 கோடியை விட்டுக் கொடுக்க அமீர்கான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தை தயாரித்த வயாகாம் நிறுவனம் பெரிய நஷ்டத்தில் இருந்து ஓரளவிற்கு தப்பித்து விட்டதாக கூறுகிறார்கள். தோல்விக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறியுள்ள அமீர்கான் அடுத்த படத்தையும் வயாகாம் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!