
சினிமாவை விட்டு விலக மாட்டேன் - ஆலியா பட்
பொதுவாகவே நடிகைகள் தாய்மை அடைந்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள். ஒரு சில நடிகைகள் மட்டுமே மீண்டும் நடிக்க வருவார்கள். ஆனால், அம்மாவானா பின்னும் சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இல்லை என ஆலியா தெரிவித்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருந்தாலும் ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் இருப்பதால் ஓய்வில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது "டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா" படங்களில் நடித்து முடித்துள்ள ஆலியா, "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, ஹார்ட் ஆப் ஸ்டோன்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குழந்தை பெற்ற பின் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஒத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!