
மாஜி மனைவிகளை வாரந்தோறும் சந்திக்கும் ஆமீர்கான்
அவர் கூறுகையில், ‛‛எனது முன்னாள் மனைவிகளான ரீனா மற்றும் கிரண் ஆகிய இருவரையும் வாரம் ஒருமுறை நேரில் சந்திப்பேன் என தெரிவித்திருக்கிறார். அதோடு நான் எனது முன்னாள் மனைவிகளை மிகவும் மதிக்கிறேன். அதன் காரணமாகவே அவர்களுடன் நட்பை கடைபிடித்து வருகிறேன். விவாகரத்து செய்து கொண்டாலும் எப்போதும் நாங்கள் ஒரே குடும்பம் தான். அதனால் தான் நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எனது முன்னாள் மனைவிகளை சந்திப்பதை தவறுவதில்லை. எப்போதும் எங்களுக்கிடையே அன்பு, பாசம் , மரியாதை இருந்து கொண்டே இருக்கிறது என்று ஒரு ஆச்சரியமான பதிலை கொடுத்திருக்கிறார் ஆமீர்கான்.
ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளும், அதன் பிறகு இயக்குனர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு 15 ஆண்டுகளும் சேர்ந்து வாழ்ந்தார் ஆமீர்கான் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!