
ஹிந்திப் படங்கள் தோல்வி ஏன்? ஆமீர்கான் பதில்
இது குறித்து நடிகர் ஆமீர்கானிடம் சமீபத்தில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆமீர், “மோசமான படங்கள், ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத படங்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். அதுதான் நடந்துள்ளது. "புஷ்பா, த காஷ்மீர் பைல்ஸ், கங்குபாய் கத்தியவாடி, பூல் புலையா 2" ஆகிய படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டன. அதனால், அவை பாக்ஸ் ஆபீசிலும் வசூலை அள்ளின,” என்று தெரிவித்துள்ளார்.
ஆமீர்கான் நடித்துள்ள "லால் சிங் சத்தா" படம் அடுத்த வாரம் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இதற்கு முன்பு பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஆமீர்கானின் இந்தப் படம் எப்படி வரவேற்பைப் பெறப் போகிறது என்பது குறித்து பாலிவுட்டினர் கூட மிகவும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!