
பொட்டு வைக்காத கரீனா : திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்
விளம்பரத்தில் கரீனா கபூர் நெற்றியில் பொட்டு வைக்காமல் காணப்படுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கரீனாவின் இந்த செயல் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். ‛‛ஒரு திருமணமான இந்து பெண் நெற்றியில் பொட்டு வைக்காமல் இப்படி தான் பணத்திற்காக விளம்பரத்தில் நடிப்பதா"". ‛‛இதுபோன்ற பண்டிகை காலங்களில் இந்து பெண்கள் அதிலும் திருமணமான பெண்கள் எந்த மாதிரியாக இருப்பார்கள் என்பது கூட கரீனாவிற்கு தெரியாதா, இந்து தர்மம் என்னவென்று அவருக்கு தெரியாதா"". ‛‛திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது என்பது முக்கியமான விஷயம்"" என இப்படி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதோடு கரீனாவை புறக்கணிக்க வேண்டும். பொட்டு இல்லையென்றால் பிசினஸூம் இல்லை என டிரெண்ட்டும் செய்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!