
கபீர் சிங் படத்தில் நடித்தபின் புகை பிடிப்பதை நிறுத்தி விட்டேன் ; ஷாகித் கபூர்
இந்த நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ள சாகித் கபூர், “கபீர் சிங் படத்தில் நடித்த பிறகு நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன். அந்த படத்தில் நடித்தபோது தினமும் இருபது சிகரெட்டுகள் வரை குடிக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்தே சிகரெட் வாடை என்னிடமிருந்து அகன்றது. அதன்பின்னரே நான் வீட்டிற்கு சென்று மனைவியையும் குழந்தைகளையும் சந்திக்க முடிந்தது. தொடர்ந்து இப்படியே நடந்ததால் அடுத்து வந்த நாட்களில் நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தையே நிறுத்தி விட்டேன்"" என்று கூறியுள்ளார்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!