
மணப்பெண் கோலத்தில் ஆலியா பட்டை கண்டு நெகிழ்ந்து போன கார் டிரைவர்
இந்த நிலையில் ஆலியா பட்டின் கார் டிரைவர் சுனில் தலேகர் மணமக்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு அதில், “உங்களுடைய சிறிய கைகளை பிடித்துக்கொண்டதிலிருந்து உங்களை இப்படி மணப்பெண் கோலத்தில் பார்த்துக் கொண்டிருப்பது வரை என்னுடைய இதயம் இன்று சந்தோசத்தால் மட்டுமே நிரம்பி வழிகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆலியா பட்டுக்கு ஐந்து வயதாகும்போது அவர்கள் குடும்பத்தில் டிரைவராக பணியில் சேர்ந்த சுனில் தலேகர், ஆலியா பட் முதன்முறையாக பள்ளி சென்ற போதும் சரி, வளர்ந்து பெரிய பெண்ணாகி முதன்முறையாக படப்பிடிப்புக்கு சென்ற போதும் சரி, அவர்தான் ஆலியாவுக்காக கார் ஓட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!