
ஹிந்தி தொடர் நடிகை சாவி மித்தலுக்கு புற்றுநோய்
சாவி மித்தல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்புள்ள மார்பகமே, இது உனக்கான பாராட்டு பதிவு. முதல்முறை உன்னை பார்த்தபோது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. என் குழந்தைகளுக்கு நீ பால் கொடுக்கும்போது உனது முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஆனால், இன்று நான் மார்பக புற்றுநோயுடன் போராடுகிறேன்.
புற்றுநோயுடன் போராடுவது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக என் மனதை சோர்வடைய செய்ய மாட்டேன். எளிதாகவும் இருக்கக்கூடாது, கடினமாகவும் இருக்கக்கூடாது. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு என் வாழ்த்துகள். உங்களிடம் இருந்து நான் உத்வேகம் பெறுகிறேன். ஆனால், அது உங்களுக்கு தெரியாது. இக்கட்டான இந்த நேரத்தில் நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி. என்று எழுதியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!