
சினிமாவாகும் லதா மங்கேஷ்கர் வாழ்க்கை
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிறகு மத்திய பிரதேச அரசு அவரது பிறந்த ஊரான இந்தூரில் அருங்காட்சியகமும், இசைப்பள்ளியும் அமைக்கப்பட உள்ளதாகவும், அவர் பெயரில் இசை கல்லூரி தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
தற்போது லதா மங்கேஷ்கரின் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பல ஆண்டுகளாகவே அவர் வாழ்க்கை கதையைப் படமாக்க முயன்றார். ஆனால் அதற்கு லதா மங்கேஷ்கர் அனுமதி தரவில்லை. "என் பாடலை கேட்பதை தவிர மக்கள் என் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை" என்று அவர் கூறி வந்தார்
இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா ஆகியோர் தற்போது லதா மங்கேஷ்கர் வாழ்க்கையை படமாக்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் முறையான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!