
புடவையில் சொக்க வைக்கும் சுஹானா கான்
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் ஏலப் போட்டியில் ஷாரூக்கானுக்குச் சொந்தமான கோல்கட்டா அணி சார்பாக ஷாரூக்கின் மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா கான் கலந்து கொண்டனர். ஷாரூக்கான் மகன் ஆர்யன் எப்போது சினிமாவில் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், மகள் சுஹானா கான் விரைவில் நடிகையாக உள்ளார். சோயா அக்தர் இயக்க உள்ள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகப் போகிறார் சுஹானா.
பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்கோத்ரா நேற்று அவருடைய சமூகவலைதளத்தில் அவர் டிசைன் செய்த புடவையில் சுஹானா இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். பாலிவுட் நாயகிகளுக்குரிய தோற்றத்தில் இருக்கும் சுஹானாவை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் வாழ்த்தி கமெண்ட் செய்துள்ளார்கள். சிவப்பு நிறப் புடவையில் சொக்க வைக்கும் அழகில் ஜொலிக்கிறார் சுஹானா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!