ராமாயணா டிரைலர் ரிலீஸ் எப்போது?
ஜூலை 27, 2026
Advertisement
இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான ராமாயணா படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜூலை 24 ஆம் தேதி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போனது. தற்போது இப்படத்தின் உலகளாவிய விநியோக உரிமையை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் கைப்பற்றியுள்ள நிலையில், திரையரங்குகளில் வருகின்ற ஜூலை 30ம் தேதி அன்று வெளியாகும், ஸ்பைடர் மேன் : பிராண்ட் நியூ டே படத்துடன் ராமாயணா டிரைலரும் திரையிடப்படலாம் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக அதாவது, ஜூலை 29ம் தேதி அன்று யுடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் டிரைலரை வெளியிடப் படக்குழு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா மற்றும் நடிகர் யஷ் இணைந்து தயாரிக்கும் இந்த இதிகாசப் படம் இரண்டு பாகங்களாக சுமார் 4000 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. முதல்பாகம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!