திருமண மோதிரம் மிஸ்ஸிங் : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய்
செப் 16, 2024
Advertisement
பாலிவுட்டின் பிரபலமான குடும்பம் அமிதாப்பச்சன் உடையது. அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பற்றி அடிக்கடி திருமணப் பிரிவு சர்ச்சை எழுவது வாடிக்கையாகிவிட்டது.
சில தினங்களுக்கு முன்பு விருது விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மகள் ஆராத்யாவுடன் துபாய் சென்றார் ஐஸ்வர்யா ராய். அப்போது அவர்களை வழக்கம் போல பல புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர். அந்தப் படங்களில் ஐஸ்வர்யாவின் விரலில் அவரது திருமண மோதிரம் இல்லாமல் இருப்பதை கவனித்து தற்போது சர்ச்சையாக்கி உள்ளனர். எப்போதுமே திருமண மோதிரத்தை அணிந்திருக்கும் ஐஸ்வர்யா இப்போது அணியவில்லையே ஏன் என்றும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் "பொன்னியின் செல்வன் 2" படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது வழங்கப்பட்டது. அம்மா ஐஸ்வர்யா விருது வாங்கியதை மகள் ஆராத்யா மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் இடம் பெற்றுள்ளது. இப்படி ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை தொடர்ந்து பிரிவு, விவாகரத்து என பேசி வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!