
வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல்
இந்த நிலையில் தனது முதல் காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது : எல்லோருக்கும் முதல் காதல் மறக்க முடியாத நல்ல அனுபவங்களைக் கொடுத்திருக்கும். ஆனால், எனக்கு அது கசப்பான நினைவுகளைத்தான் கொடுத்திருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது ஒருவரைக் காதலித்தேன். அவரால் நான் ஏமாற்றப்பட்டேன். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவரால் என் இதயம் நொறுங்கிவிட்டது.
காதலர் தினத்தன்று எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கல்லூரிப் பெண்ணான நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், அன்று என்னிடம் வந்து, "நான் இன்று என் முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல இருக்கிறேன் என்று என் காதலர் சொன்னார். நினைத்துப் பாருங்கள், அப்போது என் மனது என்ன பாடு பட்டிருக்கும்? அதோடு என் வாழ்க்கையில் அவர் தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். அந்த உறவில் இருந்தும் வெளியே வந்து விட்டேன். ஆனால், அதன் பிறகு எனக்கு இப்போது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக் கிடைத்திருக்கிறது. என்று கூறியுள்ளார் வித்யாபாலன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!