‛தெறி ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான் பட டீசர் வெளியானது
நவ 05, 2024
Advertisement
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛தெறி". இந்த படத்தை ஹிந்தியில் ‛பேபி ஜான்" என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. காளீஸ் இயக்க, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெரப் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே ஆகியோருடன் இணைந்து அட்லீயின் மனைவியான பிரியா அட்லீ தயாரித்துள்ளார்.
பேபி ஜான் படம் ஏற்கனவே பிக் சினி எக்ஸ்போவில் கண்காட்சியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான சிறப்புத் திரையிடலில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. இந்த எதிர்பார்ப்போடு இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. தீபாவளி வெளியீடாக ஹிந்தியில் வெளியாகி உள்ள சிங்கம் அகைன் மற்றும் பூல் புலையா 3 ஆகிய படங்கள் வெளியாகி உள்ள தியேட்டர்களில் இந்த படத்தின் டீசர் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன. கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச., 25ல் படம் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!