
யாருக்கோ... ஏதோ சொல்கிறார் தீபிகா படுகோனே…
தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். "ஸ்பிரிட், கல்கி 2898 எடி 2" ஆகிய இரண்டு படங்களிலிருந்து நீக்கப்பட்டது குறித்து எந்தவிதமான விளக்கத்தையோ பதிலையோ தீபிகா அளிக்கவில்லை. அதேசமயம், ஷாரூக்கான் நடிக்க உள்ள "கிங்" படத்தில் இணைந்தது குறித்து நேற்று ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “ஓம் ஷாந்தி ஓம்" படப்பிடிப்பின் போது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அனுபவமும், அதை உருவாக்கும் மனிதர்களும், அதன் வெற்றியை விட மிக முக்கியம் என்று அவர் எனக்கு முதல் பாடமாக கற்பித்தார். நான் இதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இந்த கற்றலை பின்பற்றி ஒவ்வொரு முடிவையும் எடுத்து வந்திருக்கிறேன். அதனால்தான், நாங்கள் ஒன்றாக எங்கள் ஆறாவது படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், இல்லையா?,” என ஷாரூக்கானை "டேக்" செய்து குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவு "ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி" குழுவினருக்கான மறைமுகமான பதிலாகவும் பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!