
கிங் படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாவது உறுதி: ஷாருக்கான் அதிகாரப்பூர்வமாக தகவல்
ஹிந்தியில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தற்போது ஷாருக்கான் நடித்து வரும் படம் "கிங்". இப்படத்தில் அவருடன் சுகானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஹிந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படம் டிசம்பர் 24ல் ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டபோதும், தற்போது திரைப்படத்தைப் பற்றி எந்தவொரு புதிய அறிவிப்பும் வெளியாகாததால், படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகப் பேச்சுக்கள் எழுந்தன.
இந்நிலையில், சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது, "கிங்" படம் திட்டமிட்டபடி டிசம்பர் 24ம் தேதி அன்று வெளியாகும் என்பதை ஷாருக்கான் உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் பார்வையாளர்களும் ரசிக்கும் வண்ணம் சிறந்த படத்தை வழங்கும் நோக்கில், தானும், இயக்குநர் சித்தார்த் ஆனந்தும் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படப்பிடிப்பின்போது சில காயங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததாகவும், படத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் நகைச்சுவையும் நிறைந்திருக்கும் என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!