100 கோடியைக் கடந்த ஸ்கை போர்ஸ்
ஜன 31, 2025
Advertisement
ஹிந்தித் திரையுலகத்தில் தொடர் தோல்விகளால் கீழே இறங்கி வந்த அக்ஷய் குமாரை கடந்த வாரம் வெளியான "ஸ்கை போர்ஸ்" படம் மேலே தூக்கிவிட்டுள்ளது. இப்படம் ஒரு வாரத்தில் 100 கோடி நிகர வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கும் அதிகமாக இருந்தாலும் இன்னும் சில கோடிகள் வசூலித்து நஷ்டத்தைத் தவிர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள் மூலமும் குறிப்பிடத்தக்க வருமானம் வரவும் வாய்ப்புள்ளது.
தெலுங்கு மொழிப் படங்களின் தாக்கத்தால் பாலிவுட்டில் டிரெண்ட் மாறிவிட்டதால் அங்கு சில சீனியர் நடிகர்களின் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அக்ஷய்குமாருக்கு 100 கோடி கிளப் வசூலுடன் ஆரம்பமாகியுள்ளது. இது அப்படியே தொடர வேண்டும் என அவரது ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!