சல்மானைக் கவர்ந்த ஊ சொல்றியா மாமா
ஜூன் 27, 2022
Advertisement
2021ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படங்களில் முக்கியமான ஒரு வெற்றிப் படம் "புஷ்பா". சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம். தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்ற "ஓ அன்ட்டாவா" பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. அப்பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சிகரமாக நடனமாடி இருந்தார். தமிழில் அப்பாடல் "ஊ சொல்றியா மாமா" என ஆன்ட்ரியா பாட இடம் பெற்றது.
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பாலிவுட் ஹீரோவான சல்மான் கானிடம் “கடந்த வருடத்தில் எந்த சினிமா பாடல் உங்களை ரசிக்க வைத்தது ?,” என்ற கேள்விக்கு "ஓ அன்ட்டாவா.." என பாடிக் காட்டுகிறார்.
இந்த வீடியோவை புஷ்பா படக்குழு, நடிகை சமந்தா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!