250 கோடி வசூலைக் கடந்த சாயரா
ஜூலை 26, 2025
Advertisement
மோகித் சூரி இயக்கத்தில் அஹான் பாண்டே, அனீத் பட்டா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ஹிந்தித் திரைப்படம் "சாயரா". அறிமுக நடிகர்கள் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. நான்கு நாட்களில் இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்தது. அறிமுகங்கள் நடித்த ஒரு படம் குறைந்த நாட்களில் அந்த சாதனையைப் புரிந்தது.
தற்போது உலக அளவில் இப்படம் 256 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 212.5 கோடி, வெளிநாடுகளில் 43.5 கோடி வசூலைக் கடந்துள்ளது. எப்படியும் 300 கோடி வசூலைக் கடப்பது உறுதி. முழுவதுமாக ஓடி முடிக்கும் போது 400 கோடி வசூலைக் கடக்கும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இந்த ஆண்டின் அதிக வசூல் பெற்ற படங்களில் "சாவா" படத்திற்கு அடுத்து இந்தப் படம் இரண்டாவது இடத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!