நடிகருக்கு சமமான சம்பளத்தை பெற்ற பிரியங்கா சோப்ரா
ஏப் 24, 2023
Advertisement
எப்போதும் சினிமா துறையில் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளத்தை பல மடங்கு குறைத்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இப்போது நடிகை பிரியங்கா சோப்ரா முதல் முறையாக ஹீரோவுக்கு சமமான சம்பளத்தை பெற்று இருக்கிறார். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில் அவர் கூறியது, "நான் முதல் முறையாக ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை பெற்றுள்ளேன்.
என் 22 வருட சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான விஷயமாக கருதுகிறேன். ஹிந்தி படங்களில் நடிக்கும்போது கொஞ்சம் அதிகம் சம்பளம் கேட்க வேண்டும் என்றாலே பயப்படுவேன். தற்போது சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கும்போது சம்பள விஷயத்தில் கொஞ்சம் பிடிவாதமாகவே ஆகவே இருந்தேன்.
எனக்கு ஹீரோவுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று கேட்டேன். ஏதோ அதிசயம் நடந்த மாதிரி நான் கேட்ட சம்பளத்தை தர உடனே ஒப்புக்கொண்டனர். இதை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை"" என்று தெரிவித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!