
என்டிஆர், நீல் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!
நவ 29, 2025
Advertisement
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது. இப்படத்தை தற்காலிகமாக "என்டிஆர் - நீல்" எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினா தாமஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதியன்று வெளியாகிறது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் இணைந்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!