
அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான்
அந்த வகையில் இந்திய அளவில் படம் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்து இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளன.மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவில் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படம் முதல் சனிக்கிழமை அன்று 2.42 மில்லியன் வசூலித்தது. யுஎஸ்ஏ திரையரங்குகளில் முதல் சனிக்கிழமை அன்று பதான் படம் 2.85 மில்லியன் வசூலித்துள்ளது. படத்தின் தொடக்க வார இறுதியில் வட அமெரிக்காவில் 8 மில்லியனுக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முந்தைய வசூல் சாதனை படங்களான பாகுபலி -2 , கேஜிஎப் -2 ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை ஷாருக்கானின் பதான் படம் முறியடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!