
சினிமாவாகிறது கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல்
இந்த தாக்குதல் சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர்களான சிஷ் அரூர், ராகுல் சிங் ஆகியோர் இணைந்து எழுதிய "இண்டியாஸ் மோஸ்ட் பியர்லஸ்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புத்தகத்தை தழுவி திரைப்படமாக தயாரிக்கிறார்கள். இதற்கான உரிமையை இயக்குநர் அபூர்வா லாகியா பெற்றுள்ளார். அவரே இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இவர், "ஏக் அஜ்னபி", "மிஷன் இஸ்தான்புல்", "ஜன்ஜீர்" உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். பான் இந்தியா முறையில் உருவாக இருக்கும் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!