
போதை வழக்கில் சிக்கவைக்கப்பட்டவர் ஹிந்தி நடிகை: சார்ஜா சிறையிலிருந்து விடுதலை
இந்த விசாரணையில் ஆண்டனி பால் என்பவர் தனது நண்பர் ராஜேஷ் மூலம் நடிகை கிரிசனிடம் போதை பொருள் பார்சலை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து இருவரையும் செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நடிகையை பழிவாங்க அவரை போதை வழக்கில் சிக்க வைத்ததை ஒப்புக் கொண்டனர்.
கிரிசன் பெரிராவை போதைப்பொருள் கடத்தலில் சிக்கவைத்து அவருக்கு தெரியாமல் போதைப்பொருளை மறைத்து கொடுத்து அனுப்பியது பற்றி சார்ஜாவில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிரிசன் பெரிரா, சார்ஜா ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து விரைவில் மும்பைக்கு வருகிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!