
டன்கி படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!
நவ 23, 2023
Advertisement
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் "டன்கி". இதில் டாப்ஸி, விக்கி கவுசல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ராஜ்குமார் ஹிரானி, ஷாரூக்கான் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளதால் இதன் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திலிருந்து பிரீத்தம் இசையில் லுட்டு புட்ட என்ற முதல் பாடல் வெளியானது. இந்த பாடலை பாலிவுட் ரசிகர்களுக்கு அபிமான அர்ஜீத் சிங் பாடியுள்ளார். இப்பாடல் வெளியாகி இதுவரை யூடியூப்பில் 3.1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!