
திரிஷ்யம்-3 ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன்
ஜூன் 07, 2026
Advertisement
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான "திரிஷ்யம்" படத்தின் இரண்டு பாகங்களும் ஏற்கனவே வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாகமும் கடந்த மே 21ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 232 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில் ஹிந்தியில் "திரிஷ்யம்" படத்தின் முதல் இரண்டு பாகங்களில் நடித்த அஜய் தேவ்கன் மூன்றாவது பாகத்திலும் நடித்துள்ளார். அபிஷேக் பதக் இயக்கியுள்ள இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படம் குறித்து அஜய் தேவ்கன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ""திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் மலையாள படத்தை போன்றே இருக்காது. ஹிந்தி ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான கதை அனுபவத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸில் சில முக்கிய காட்சிகள் மாற்றப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. அதனால் முந்தைய இரண்டு பாகங்களை விட இந்த மூன்றாம் பாகம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்"" என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!