அனிமல் படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு
அக் 27, 2023
Advertisement
ஹிந்தியில் அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடித்து வரும் திரைப்படம் "அனிமல்". ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், பப்லு பிரிதிவிராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிக படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்திலிருந்து தமிழில் (போகாதே), ஹிந்தியில் (சட்டரங்கா) என்கிற இரண்டாம் பாடலை வெளியிட்டுள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையில் வெளியாகி உள்ள இந்த பாடல் மெலோடி பாடலாக வெளியாகி இருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!