Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மயங்கினேன் தயங்கினேன்

மயங்கினேன் தயங்கினேன்,Mayanginen Thayanginen
  • மயங்கினேன் தயங்கினேன்
  • நிதின் சத்யா
  • திஷா பாண்டே
  • இயக்குனர்: எஸ்.டி.வேந்தன்
31 மே, 2012 - 15:24 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » மயங்கினேன் தயங்கினேன்

தாய்மண் திரையகம் சார்பில் தயாரிக்கும் முதல்படம் மயங்கினேன் தயங்கினேன். மனநலவிடுதியில் நடக்கும் பாலியல் வன்முறையை வெளிச்சத்துக்கு கொண்டு வர படமாக உருவாக்கி வருகிறார் இன்பா படத்தை இயக்கிய எஸ்.டி.வேந்தன். சமூக அவலத்தை தோலுரிக்கும் படமாக உருவாகி வரும் இப்படத்தில் நிதின் சத்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி தமிழ்ப் படம் புகழ் திஷா பாண்டே. இன்னொரு நாயகனாக தருண் சத்ரியா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜய் ரத்னம், டிபி கஜேந்திரன் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. ரேணிகுண்டாவில் நடித்த சஞ்சனா சிங் ஒரு அட்டகாசமான குத்துப் பாடலுக்கு ஆடியுள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in