Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சிறுமலை

சிறுமலை,sirumalai
  • சிறுமலை
  • ராகுல்
  • ஜேனட்
  • இயக்குனர்: ரமேஷ்
29 ஜன, 2011 - 17:31 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » சிறுமலை

ஆக்டோபெஸ் எண்டர்டைன்மென்ட் சார்பில் புதுமுகங்கள் நடிக்கும் படம் "சிறுமலை".

மலைகளையும், மலைசார்ந்த வளங்களையும் அழிக்க நினைக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை எதிர்த்து போராடும் ஒரு கிராமத்தையும், அதற்கு தலைமையேற்றும் நடக்கும் ஒரு வீர பெண்ணை பற்றியதே படத்தின் கதை.

படத்தில் வீர பெண்ணாக ஜேனட் என்ற கதநாயகி அறிமுகமாகிறார். இவர் பரதநாட்டியம், குச்சுபுடி போன்ற கலைகளை கற்றுள்ளார். கதாநாயகனாக ராகுல் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜரிஷி, புஷ்பா, கணேஷ், கென்னடி, முருகதாஸ், சிவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இரா.இரமேஷ். பிரபாகர் இசையமைக்க, கணேஷ் மேனன், சனல் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை காடு, பழையூர், புதூர், அகஸ்தியர்புரம், கடம்மாளிகுளம் தென்மலை போன்ற மலை கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap