விமர்சனம்
அ நிறம் | அளவு
தேனி மாவட்ட மலைப்பகுதியில் வசிக்கும் காடர் இன மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பெண் குழந்தைகள் பூப்பெய்திவிட்டால் உடனே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். பள்ளிக்கூடம் வேணாம், காட்டு வாழ்க்கையே போதும் என்கிறார்கள். அந்த பகுதியில் வசிக்கும் ஆரவ், ரம்யா பாண்டியன் மகளான கிருத்திகாவுக்கு படிக்க வேண்டும் என ஆசை. அந்த சமயத்தில் அவர் பெரிய மனுஷி ஆக, அந்த குல வழக்கப்படி திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. திருமணம் வேண்டாம் படிப்புதான் முக்கியம் என நினைத்து தேனி கலெக்டர் அருள்நிதியை சந்திக்க மலையில் இருந்து தனியே கீழே இறங்குறாள் கிருத்திகா. அவள் கலெக்டரை சந்தித்தாளா? காடர் மலைவாழ் மக்கள் பகுதிக்கு பள்ளிக்கூடம் வந்ததா? படிப்பறிவு இல்லாதததால் அந்த மக்கள் சந்தித்த பிரச்னைகள் என்னென்ன? என்பது அருள்வான் படக்கதை
தேன் படத்தை இயக்கிய கணேஷ் விநாயகன் இயக்கியிருக்கிறார். அந்த படம் மாதிரியே இதுவும் சமூகப்பிரச்னையை, சில உண்மை சம்பவங்களை இணைத்து பேசுகிறது. காடர் இன மக்களின் வாழ்வியல், வன இலாக்கா அதிகாரிகளால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், படிப்பு இல்லாததால் ஏற்படும் சிக்கல்கள், ஆண்களின் முகத்தை பார்க்க கூடாது என்பதால் பள்ளிக்கூடம் போகாத பெண் குழந்தைகளின் நிலை, குழந்தை திருமணங்கள் என பல பிரச்னைகளை முதற்பாகம் பேசுகிறது.
கிருத்திகா என்ற சிறுமியை சுற்றியே முழுக்கதையும் நடக்கிறது. அவளின் பாசக்கார தந்தையாக ஆரவ், அவர் மனைவியாக ரம்யா பாண்டியன் கச்சிதமாக நடித்து இருக்கிறார்கள். போதை காளான் கும்பலுக்கு துணை போகும் வன அதிகாரி ஜான் விஜயுடன் மோதல், மனைவி, மகள் மீது பாசம், அந்த குல வழக்கப்படி வேலன் ஆட்டம் ஆடுதல் என நிறைவாக நடித்து இருக்கிறார் ஆரவ். நடை, உடை, பாவனைகளில் அந்த மலைவாழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் ரம்யா பாண்டியன். இரண்டு பேரும் படத்துக்கு பக்கா பொருத்தம். சிறுமி தாத்தாவாக வருபவரும் நல்ல தேர்வு. வழக்கம்போல் வில்லத்தனம் என்ற பெயரில் ஓவர் ஆக்டிங் செய்து, கடுப்பேற்றுகிறார் ஜான் விஜய். அடுத்த படத்திலாவது புதுசாக எதாவது முயற்சி பண்ணுங்க சாரே? நிருபராக வரும் காளி வெங்கட், அரசு அதிகாரி விடிவி கணேஷ், ஊர் தலைவர் அருள்தாஸ் அந்த கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்.
முதற்பாதி முழுக்க இப்படி மலையில் பிரச்னைகளுடன் நகர, அடுத்த பாதி தேனியில் நடக்கிறது. நகரத்துக்கு வரும் சிறுமி, அவள் சந்திக்கும் பிரச்னைகள், கலெக்டர் அவளுக்கு ஆதரவு கொடுப்பது என இன்னொரு கோணத்தில் நகர்கிறது. இரண்டு போர்ஷனிலும் சிறப்பாக, அந்த கேரக்டர் தன்மை உணர்ந்து நடித்துள்ளார் கிருத்திகா. தனக்கு படிப்பு முக்கியம் என பெற்றோர்கள், ஊர்காரர்களிடம் சொல்வதும், டீச்சரை பார்த்து பேசுவதும், திருமணம் வேணாம் என மறுப்பதும் நல்ல சீன்கள். பிற்பாதியில் தேனியில் தனி ஆளாக அவள் சந்திக்கும் பிரச்னைகள், பதற வைக்கின்றன. கலெக்டர் அருள்நிதி ஆதரவு கிடைத்தவுடன் அவர் முகத்தில் வரும் நிம்மதி, அப்பப்பா. ஒரு முக்கியமான சீனில் கிருத்திகாவும் அழுதும், நம்மையும் அழ வைக்கிறார். சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதுகளை அவருக்கு அள்ளி கொடுக்கலாம்.
கலெக்டராக இடைவேளையில் இருந்துதான் வருகிறார் அருள்நிதி. முத்துவேல் என அவரின் குடும்ப பெயரை அவர் கேரக்டருக்கு சென்டிமென்டாக சூட்டியிருக்கிறார் இயக்குனர். அவரின் சமூக அக்கறை சீன்கள் சபாஷ். அந்த குழந்தை மொழி தெரியாமல் தவிக்கும்போது தீர்வு சொல்வது, மலைப்பகுதிக்கு பள்ளிக்கூடம் அமைய பாடுபடுவது, கடைசியில் ஒரு அதிரடி முடிவெடுப்பது இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார். கல்விக்கு ஆதரவான, மலைவாழ் மக்களுக்கு உதவுகிற அந்த கேரக்டரும் பேசப்படும். ஹீரோயிசம், ஆடல் பாடல், சண்டை, பில்டப் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த நடித்தற்காக அவரை பாராட்டலாம். கிளைமாக்சிலும் நல்ல கருத்தை சொல்கிறார். அதில் காமராஜரை மட்டும் இயக்குனர் மிஸ் பண்ணிவிட்டார்.
அந்த மலைவாழ் பகுதி, அருவி, காடு, அந்த மக்கள் என முதற்பாதியில் ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் சுகுமார். மலை சம்பந்தப்பட்ட சீன்கள் கண்களுக்கு குளிர்ச்சி. ஜி.வி.பிரகாஷ் இசை,பாடல்களும் கதையுடன் ஒன்றி இருக்கிறது. முதற்பாதியை விட, இரண்டாம்பாதியில் வேகம் அதிகம். கதையும் சூடுபிடிக்கிறது. சில நறுக் வசனங்கள், சமூக அக்கறையுள்ள சீன்கள் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த கதையில் வெள்ளைக்காரன், போதைக்காளான், சண்டை தேவையில்லாத சீன்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்ட காலகட்டத்திலும் இப்படிப்பட்ட மலை கிராமமா? இப்படிப்பட்ட மக்களா? இப்படிப்பட்ட அவஸ்தையா? என 1997 பின்னணியில் கதை நகர்த்தி, கல்வி குறித்த ஒரு விழிப்புணர்வு விஷயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். என்ன, காடர் மொழி விஷயத்தில் குழப்பியிருக்கிறார். அந்த மொழி பேசாமல் படம் முழுக்க தமிழில் பேசியிருக்கலாம். தேவையான சில இடங்களில் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், முக்கியமான பல சீன்களில் அந்த மொழியை சிறுமி, அந்த ஊர் மக்கள் பேசுவதாக சீன்கள் வருகிறது. அதை புரிந்து கொள்ள முடியாததால் சீன்களின் தாக்கம், கதையின் அழுத்தம் குறைகிறது. அதை தவிர்த்து இருந்தால் இன்னமும் கதை மனதோடு ஒன்றி இருக்கும். தவிர, கிளைமாக்ஸ் காட்சிகள் அந்த பெண்ணின் பதவி கொஞ்சம் சினிதாத்தனம். 1990களில் கதை நடப்பதால், இப்போது என்ன நிலை? பழசை சொல்வது ஏன் என்ற கேள்வியும் வருகிறது. சில குறைகள் இருந்தாலும் கல்வியின் அவசியத்தை, பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை சொன்ன விதத்தில் அருள்வான் அழகான, அழுத்தமான படைப்பு.
அருள்வான் - கல்வி போராட்டம்

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!