Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மை சாண்டா (மலையாளம்)

மை சாண்டா (மலையாளம்),My Santa
  • மை சாண்டா (மலையாளம்)
  • திலீப் (புதுமுகம்)
  • இயக்குனர்: சுகீத்
31 டிச, 2019 - 13:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மை சாண்டா (மலையாளம்)

நடிகர்கள் : திலீப், அனுஸ்ரீ, பேபி மானஸ்வி, சன்னி வெய்ன், தர்மஜன், சாய்குமார் மற்றும் பலர்
டைரக்சன் : சுகீத்
வெளியான தேதி : டிச., 25 2019
ரன்னிங் டைம் : 2 மணிநேரம் 33 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆர்டினரி என்கிற படத்தை இயக்கிய சுகீத் என்பவர் இயக்கியுள்ள படம் தான் ‛மை சாண்டா.

விபத்தில் பெற்றோர்களை இழந்து விட்ட சிறுமி மானஸ்வி, தன் தாத்தா சாய்குமாரின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். கிறிஸ்துமஸ் தாத்தாவான சாண்டா கிளாஸ் மீது மிகுந்த பிரியம் கொண்ட மானஸ்வி, கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சாண்டா கிளாஸ் நேரிலேயே வந்து தன்னை சந்திப்பார் என்று உறுதியாக நம்புகிறார். இதை பள்ளிக்கூடத்தில் உள்ள தனது சக மாணவர்களிடமும் நம்பிக்கையாக கூறுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் முதல் நாள் இரவில் தனது தாத்தா பக்கத்து வீட்டு நண்பரிடம் சாண்டா கிளாஸ் வரமாட்டார் என்று பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு அதிர்ச்சியாகிறார் மானஸ்வி.

ஆனால் எதிர்பாராத விதமாக அன்றிரவு மானஸ்வி முன்பாக தோன்றும் சாண்டா கிளாஸ் மானஸ்வி என்ன நினைத்தாரோ அத்தனையும் நிறைவேற்றுகிறார்.. மறுநாள் சாண்டா கிளாஸ் வந்து போனது பற்றி அவர் சொல்வதை யாரும் நம்ப மறுக்கின்றனர் ஆனாலும் ஒருகட்டத்தில் அது உண்மைதான் என அவர்கள் உணர்கின்றனர்.. அப்படி என்றால் சாண்டா கிளாஸ் தாத்தாவாக உண்மையிலேயே வந்து சென்றது யார் என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது..

இது திலீப் படம் என்கிற எண்ணத்துடன் படம் பார்க்க செல்பவர்களுக்கு உள்ளே சென்றபின் தான், இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம் என்கிற விஷயமே தெரிய வருகிறது. படம் முழுவதும் பேபி மானஸ்வி தான் நிறைந்திருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் மகிழ்ச்சி, குறும்பு, சோகம், கோபம் என கலவையான உணர்ச்சிகளை விதவிதமான முகபாவம் காட்டி பின்னாளில் மிகப்பெரிய நடிகையாக வலம் வருவார் என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் மானஸ்வி.

கிட்டத்தட்ட இடைவேளை நெருங்கும் நேரத்தில் தான் என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் திலீப். ஆனாலும் அப்போது இருந்து கிளைமாக்ஸ் வரை அவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்திலேயே நடித்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியம்தான்.. சொல்லப்போனால் நட்புக்காக இந்த கதையில் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் அவர் நடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல வழக்கமாக திலீப்பிடம் வெளிப்படும் எந்த அம்சங்களும் இந்த படத்தில் இல்லை என்றாலும் கதைக்கு ஏற்ற நடிப்பை கச்சிதமாக வழங்கியுள்ளார் திலீப்.

மானஸ்வியின் தாத்தாவாக வரும் சாய்குமார், பக்கத்து வீட்டுக்காரர் சித்திக் மானஸ்வியிடம் எப்போதும் வம்பு இழுத்து மாட்டிக்கொள்ளும் தர்மஜன் மற்றும் கலகலப்பாக பழகும் பள்ளி வாத்தியார் சன்னி வெய்ன் இவர்களுடன் மானஸ்வியின் பள்ளித்தோழியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராகக வரும் சிறுமி என அனைவருமே தங்களது நடிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.. ஒரு சிறுமியின் ஆசையை சாண்டா கிளாஸ் நிறைவேற்றி வைக்கிறார் என்கிற கதையை எந்தவித திருப்பங்களும் இல்லாத ஒரு ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுகீத்.. திலீப் படம் என்கிற எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தி கிடைக்கலாம்.. ஆனால் அவர்களுடன் செல்லும் குழந்தைகள் படம் முழுதும் குதூகலமாக ரசித்து கொண்டாடக்கூடிய ஒரு படம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in