விமர்சனம்
படத்தின் மொத்தத்தையும் டுவைன் ஜான்சன் தனியாளாக தோளில் தாங்கியுள்ளார். வழக்கம்போல் அஜானுபாகுவான தனது உடல் தேகத்தை காண்பித்தும், நடிப்பிலும் ரசிகர்களை கவருகிறார்.
பிரியங்காவிற்கு படத்திற்கு பெரிய ரோல் தான், ஆனால் படத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக தான் காண்பிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படம் என்பதாலோ கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார் பிரியங்கா. ஆனால் அவருக்கு நெகட்டீவ் கொஞ்சம் கூட செட்டாகவில்லை.
டுவைன், பிரியங்கா தவிர ஜாக் எப்ரான், அலெக்ஸாண்ட்ரா, டேவிட், கெல்லி என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் டுவைனும், பிரியங்காவும் தான் படத்தில பளிச்சிட்டிருக்கின்றனர்.
பேவாட்ச் படத்தை செத் கார்டன் இயக்கியுள்ளார். இயக்குநராக தன் ரோலை சரியாக செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது. அதேசமயம் படத்தில் இருக்கும் காமெடி ஆங்காங்கே ரசிகர்களை கொஞ்சம் சரிக்க வைக்கிறது. கடற்கரை பின்னணியை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இசையும், பின்னணி இசையும் இதம் சேர்க்கின்றன. ஆனாலும், பலவீனமான கதையும், அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பதை ரசிகர்கள் முன்கூட்டியே அறியும் பலவீனமான திரைக்கதையும் படத்திற்கு பெரிய மைனஸாக இருக்கிறது.
மொத்தத்தில், பேவாட்ச் - பெட்டர், டோன்ட்வாட்ச்
ரேட்டிங் - 2/5















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!