விமர்சனம்
அ நிறம் | அளவு
படத்தின் ஆரம்பத்திலேயே இந்தக் கதை 90ம் ஆண்டுகளில் நடப்பது என சொல்லிவிடுகிறார்கள். அந்தக் கால கட்டங்களில் இம்மாதிரியான சென்டிமென்ட்டான கதைகள்தான் அதிகம் வந்தன. அந்தக் கதை இந்தக் காலத்திலும் வரவேற்பு பெறும் என இயக்குனர் நினைத்திருக்கிறார் போலிருக்கிறது.
சந்தோஷ் பிரதாப் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறார். ஒரு நாள் ஊரை விட்டு வந்து தனியாக தவித்துக் கொண்டிருந்த சாந்தினிக்கு உதவி செய்ய நினைக்கிறார். சாந்தினியை அவர் வீட்டில் கொண்டு போய்விடுகிறார். ஆனால், ஊர் பஞ்சாயத்தில் இருவரும் காதலர்கள், அதனால்தான் ஊரை விட்டு ஓடி விடுகிறார்கள் என நினைத்து கட்டாயத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மறுநாள் மனைவியிடம் சொல்லிவிட்டுப் பிரிந்து சென்னைக்கு வருகிறார் சந்தோஷ். சில மாதங்கள் கழித்து சாந்தினி கர்ப்பமடைந்த விஷயம் தெரிய வர மனைவியை ஏற்றுக் கொள்கிறார். இந்த திருமண விவகாரம் பற்றி சந்தோஷ் குடும்பத்தாருக்குத் தெரியாது. சந்தோஷிற்குத் திருமணம் செய்ய அவருடைய அம்மா தீவிரமாகப் பெண் பார்க்கிறார். சந்தோஷ் தன் திருமணம் பற்றி அம்மாவிடம் தெரிவித்தாரா, அவரது லட்சியப்படி சினிமா இயக்குனரானாரா எனபதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சென்டின்மென்ட்டுக்குள் நுழைந்து விடுகிறது. அதன் பின் கடைசி வரை சென்டிமென்ட் மழையில் நனைய வைக்கிறார் இயக்குனர் ரவிச்சந்தர்.
சினிமா உதவி இயக்குனராக சந்தோஷ் பிரதாப். எப்படியும் ஒரு நாள் இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சத்தியல் இருக்கிறார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை திருமணம் செய்ய வைத்துவிடுகிறது. அப்படி ஒரு கட்டாயத் திருமணம் நடக்கும் போது பெரிய அதிர்ச்சியைக் காட்டத் தவறுகிறார். ஆனால், சென்டிமென்ட் காட்சிகளில் அவருடைய நடிப்பு கவர்கிறது.
அப்பாவி கிராமத்துப் பெண்ணாக சாந்தினி. ஊரார் கட்டாயத்தால் சந்தோஷைத் திருமணம் செய்து கொள்கிறார். அதன்பின் நல்ல மனைவியாக இருந்து கணவரின் அன்பைப் பெறுகிறார். ஏழ்மையாக வாழ்ந்தாலும் கணவரைப் புரிந்து கொண்டு குடும்பம் நடத்துகிறார். இப்படி ஒரு மனைவி கிடைப்பது லட்சியப் பயணத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வரம்தான்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவமில்லை. ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள். படம் முழுவதும் சந்தோஷ், சாந்தினி ஆகியோரைச் சுற்றியே நகர்கிறது. கிளைமாக்சில் வரும் மலையாள நடிகர் இன்னொசென்ட் கதாபாத்திரம் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. கீழ்த்தரமான சினிமாக்களை எடுப்பவர்களுக்கு ஒரு அட்வைஸைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இம்மாதிரியான படங்களுக்குப் பாடல்கள் சிறப்பாக இருந்தால் அது படத்திற்கு கூடுதல் பலம். அதை செய்யத் தவறியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேல். இருப்பினும் பின்னணி இசையில் கொஞ்சம் முயற்சித்திருக்கிறார்.
90களின் கதை என்பதற்காக அதே மாதிரியான படமாகவே கொடுத்திருக்க வேண்டுமா என்ன?. அந்தக் கால கட்டங்களிலேயே இந்தப் படம் வந்திருந்தால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கும்.
நான் அவளை சந்தித்த போது - 90களின் சிந்தனை

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!