Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

வர்ணம்

வர்ணம்,Varnam
  • வர்ணம்
  • நடிகர்: கிரி
  • மோனிகா
  • இயக்குனர்: எஸ்.எம்.ராஜூ
20 அக், 2011 - 16:05 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வர்ணம்

தினமலர் விமர்சனம்



செக்ஸ் வெறி பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல... ஜாதி வெறி பிடித்தவர்களுக்கும் சரியான சம்மட்டி அடியாக வெளிவந்திருக்கும் படம் தான் "வர்ணம்"!

அப்பா, ஜாதிக்காக உயிரைக் கொடுக்க, அவர் வழி வந்த பிள்ளை, விவரம் புரியாத வயதிலேயே ஜாதிவெறி பிடித்து அலைகிறார். எல்லாம் தன்னுடன் படிக்கும் கீழ்ஜாதி ‌பெண் மீது காதல் வரும் வரை தான். தனக்கு அடைக்கலம் தந்த ஜாதி திமிர் பிடித்த தன் மாமாவையே அந்த காதலால், ஒரு கட்டத்தில் எதிர்க்கிறார் ஹீரோ! விடுவாரா ஊர் பெரிய மனிதரான மாமா. ஹீரோவின் காதலியை சீரழிப்பதுடன், காதலியின் அண்ணணையும் அசிங்கப்படுத்துகிறார். இதற்கு பழிக்குபழியாக மாமாவிற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அவரது கீழ்ஜாதி காதலருடன் தப்பி பிழைக்க விடுகிறார் ஹீரோ! அப்புறம்? அப்புறமென்ன...? மாமா ஹீரோவை கொன்றாரா? ஹீரோ வென்றாரா? என்பது க்ளைமாக்ஸ்!

பள்ளி மாணவர் மணியாக ஹீரோவாக புதுமுகம் கிரி, ஜாதிவெறி பிடித்த இளைஞனாக காதலுக்கு முன் சீறிப்பாய்ந்திருக்கிறார் என்றால், காதலுக்குப் பின் கசிந்து உருகி தமிழ் சினிமாவில் தனக்கு சரியான எதிர்காலம் இருக்கிறது என்பதை நிருபித்திருக்கிறார். வில்லன் மாமாவாக, ஊர் பெரிய மனிதராக நடிகர் சம்பத்தும், நரம்பு புடைக்க வில்லத்தனத்தில் வென்றிருக்கிறார்.

நாயகிகள் மோனிகா -அஸ்வதா இருவரில் சிலந்தி மோனிகா, ஷகிலா ரேஞ்சுக்கு காதல் காட்சிகள் என்ற போர்வையில் காமக்காட்சிகளில் இறங்கி வந்து நடித்திருக்கிறார் என்றால், தங்கமாக பள்ளி மாணவியாக வரும் அஸ்வதா, சாவித்திரி அளவிற்கு உருக்கமாக நடிக்க முயன்றிருக்கிறார். அன்வராக - ஆதிஷ், நந்தா - விஜய், ரத்னம் - முத்துக்குமார், முனியாண்டி சாமியாக - கராத்தே ராஜா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஐசக் தாமஸின் அதிரடி இசை, பிரேம் குமாரின் இருட்டிலும் மிரட்டும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் படத்தின் பலம்! எஸ்.எம்.ராஜூவின் எழுத்திலும், இயக்கத்திலும் ஆங்காங்கே ஒரு சில லாஜிக் மிஸ்-டேக்குகள் இருந்தாலும் "வர்ணம்" நல்ல "வண்ணம்" புதிய வானம்!!



வாசகர் கருத்து (3)

Jayachandran - Imphal,இந்தியா
07 ஜன, 2012 - 17:20 Report Abuse
 Jayachandran Super......................
Rate this:
ஹன்டர் - trichy,இந்தியா
02 ஜன, 2012 - 21:20 Report Abuse
 ஹன்டர் இது போன்ற நல்ல படங்கள் ஏன் மக்களின் ஆதரவை பெறுவதில்லை?
Rate this:
முஹம்மது அஷ்ரப் - kuwait,இந்தியா
11 நவ, 2011 - 16:42 Report Abuse
 முஹம்மது அஷ்ரப் ஹாய் ஹவ் ஆர் யூ சார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

வர்ணம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in