Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மொசகால்லகு மொசகாடு (தெலுங்கு)

மொசகால்லகு மொசகாடு (தெலுங்கு),mosagallaku mosagadu (Telugu)
  • மொசகால்லகு மொசகாடு (தெலுங்கு)
  • சுதீர் பாபு
  • நந்தினி ராய்
  • இயக்குனர்: ஏ.என். போஸ்
23 மே, 2015 - 17:46 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மொசகால்லகு மொசகாடு (தெலுங்கு)

இந்தியாவில் இருந்து விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள் மற்றும் உலக அரங்கில் பெரும் மதிப்பு உள்ள சிலைகளை கடத்துவது பற்றிய கதையில் காமெடி அதிகம் கலந்து, கொஞ்சம் காதல் மற்றும் ஆக்ஷன் என அனைத்தையும் சேர்த்து கொடுக்கப்பட்டு இருக்கும் படம் தான் மொசகால்லகு மொசகாடு. இந்த படத்தின் டைட்டில் அன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா நடித்த படத்தின் டைட்டில் தான். அதாவது அதே தலைப்பை அவரது மருமகனான பிரபல நடிகர் சுதீர் பாபு நடித்த படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டு இருக்கின்றது.


படத்தின் ஆரம்பத்தில் உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு அருகே உள்ள இடத்தில் 12ம் நூற்றாண்டின் சிலைகள் இரண்டு திருடப்படுவதாக காண்பிக்கப்படுகின்றது. அதன் பிறகு படம் துபாய்க்கு நகர்கிறது.அங்கு தான் இந்தியாவில் இருந்து திருடப்படும் சிலைகளுக்கான டீல் நடைபெறுகின்றது.

அங்கிருந்து அப்படியே நகர்ந்து ஐதராபாத்துக்கு வந்து, சிறு சிறு திருட்டு வேலைகளில் ஈடுபடும் க்ரிஷிடம் (சுதீர் பாபு) வந்து சேர்கிறது. சொந்த பந்தங்கள் இல்லாத சுதீர் பாபு ஜானகியை (நந்தினி ராய்) சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். அவரை பின் தொடர்ந்து செல்கிறார். அப்படியே சிலை கடத்தல்காரனான கௌஷிக்கிடம் (ஜெயபிரகாஷ் ரெட்டி) சிக்கி அவரது திட்டத்திற்கு உதவும் படி ஆகிவிடுகின்றது. கௌஷிக் சிலைகளை கடத்தி வெளிநாட்டில் உள்ள டான் ருத்ராவிடம் (அபிமன்யு சிங்) கொடுக்க வேண்டும். அதற்காக கௌஷிக் ஹீரோ சுதீரை பயன்படுத்துகிறார். சிலைகள் துபாய்க்கு கடத்தப்படுகின்றதா? அந்த திட்டத்தில் சுதீர் பாபுவுக்கு என்ன வேலை? அவர் காதலியை கரம் பிடிக்கிறாரா? அவர் எப்படி தப்பிக்கிறார்? என்பதுதான் படத்தின் மொத்த கதையும் ஆகும்.

நடிகர் சுதீர் பாபு தானும் ஒரு மாஸ் ஹீரோ என்பதை நிரூபித்து இருக்கிறார். அவர் தன்னுடைய உடம்பை நன்கு குறைத்து நல்ல தோற்றத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஆக்ஷன், காமெடி, நடனம் என கலக்கி உள்ளார். படத்தின் பட்ஜெட் குறைவு என்பதால் பார்த்து பார்த்து செலவு செய்திருப்பதாக தெரிகிறது. நடிகை நந்தினி ராயின் நடிப்பு கச்சிதமாக உள்ளது. அபிமன்யு சிங் தானும் ஒரு சிறந்த வில்லன் என்று நிரூபித்துள்ளார். அவருடைய நடிப்பில் அனுபவம் பேசுகின்றது. ஜெயபிரகாஷ் ரெட்டியும் தனது வேடத்தை நன்றாகவே செய்திருக்கிறார். ஹீரோ சுதீர் பாபுவின் நெருங்கிய நண்பர் என்பதால் பிரபல நடிகர் மஞ்சு மனோஜும் ஒரு சிறிய வேடத்தில் நடித்து நெஞ்சில் நிலைத்து இருக்கிறார்.

சிலை கடத்தும் காட்சிகளை இன்னும் விறுவிறுப்பாக காண்பித்து இருக்கலாம். படத்தின் ஆரம்ப காட்சிகளில் இருந்த த்ரில் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து விடுகின்றது. இடை, இடையே காமெடி சீன்கள் வந்து படத்தை அழகாக நகர்த்தி விடுகின்றது. படத்தில் கேமராவுக்கு அதிக வேலை கொடுக்கப்பட்டு இருப்பதை சில காட்சிகள் மூலம் தெள்ளத் தெளிவாகின்றது. பாடல்களுக்குக்கான இசையில் இசை அமைப்பாளர் மணிகாந்த் கத்ரி கூடுதல் கவனம் செலுத்தி இருப்பது அழகாகவே தெரிகின்றது. அனைத்து தர மக்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தை நன்றாகவே இயக்குனர் கொண்டு சென்று இருக்கிறார். குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.


மொத்தத்தில் கோடைக்கு ஏற்ற காமெடி கலாட்டா



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in