Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தொப்பி

தொப்பி,Thoppi
  • தொப்பி
  • பிற நடிகர்கள்: முரளி ராம்
  • பிற நடிகைகள்: ரக்ஷயா
  • இயக்குனர்: யுரேகா
10 மார், 2015 - 14:54 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தொப்பி

தினமலர் விமர்சனம்


பாடலாசிரியர் யுரேகா "மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும்" படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இயக்கி இருக்கும் திரைப்படம்!. மலைவாழ் மக்களை, காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு பழி தீர்க்கின்றனர்! என்பதை வித்தியாசமும், விறுவிறுப்புமாக புதியதொரு கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் தொப்பி.


கதைப்படி., கதை நாயகர் ஜித்தன் எனும் முரளி ராமுக்கு போலீஸ் ஆக வேண்டுமென்பது லட்சியம். குலசாமிக்கு படையல் போட்டு, கடா விருந்து வைத்து திருடப்போகும் மலைஜாதி குடும்பத்தில் பிறந்த அவர்., அதற்காக, அவரது போலீஸ் லட்சியத்திற்காக பெற்ற தகப்பனையும், தாய்மாமனையும் கூட போலீசுக்கு போட்டு கொடுக்கிறார். அவர் வாயிலாக, பல திருட்டு கேஸ்களில் ஈஸியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் துறையும், அதில் அதிகாரிகளாக இருக்கும் சில கருப்பு ஆடுகளும் முரளிராமுவை, போலீஸ் ஆகவிடாமல், போலீஸ் இன்பார்மராகவே வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்!.


இதில் வெகுண்டெழும் முரளிராமை, ஒரு சந்தர்ப்பத்தில் லாக் -அப் கைதியாக்கி அவரை அடித்தே கொன்றுவிடும் போலீஸை, ஜித்தன்-முரளிராமு எப்படி பழிதீர்க்கிறார்? எனும் கதையுடன் முரளியின் மாமன் மகளாக நாகுவாக வரும் ரக்ஷாராஜின் காதலையும் கலந்துகட்டி தொப்பி யை சூடாகவும், சுவாரஸ்யமாகவும் படைத்திருக்கிறார் இயக்குநர் யுரேகா!.


ஜித்தனாக, சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு புரோமோஷன் ஆகியிருக்கும் முரளிராம், போலீஸ் கனவுகளுடன் செய்யும் செயற்கரிய காரியங்கள் த்ரில்லாக இருக்கிறது. கிச்சுகிச்சு பாடலில், கதாநாயகி ரக்ஷாராஜூடன் காட்டும் நெருக்கமும், கிறக்கமும் கிக்காக இருக்கிறது. சொந்தபந்தங்களையே காட்டி கொடுக்கும் ஹீரோவை, ஊரும் உறவும் விட்டுவைப்பது ஆச்சர்யம்!. ஆனாலும், முரளிராமின் உருக்கமான நடிப்பில் அந்த குறை தெரியவில்லை.


கதாநாயகி நாகுவாக வரும் ரக்ஷா ராஜ், கிச்சு கிச்சு பாடலில் கவர்ச்சி, படம் முழுக்க ஹோம்லி என கலக்கி மலைவாழ் மனுஷியாகவே வாழ்ந்திருக்கிறார். சுருட்டுசாமி, ஜி.எம்.குமார், இன்ஸ் அருள்தாஸ், அலெக்ஸாக வரும் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உள்ளிட்டவர்களும் பளிச்!. அதிலும் ஜி.எம்.குமார், ஏ.டி.எம்.மிஷினை பெயர்த்துக்கொண்டு போய் விறறுவிட்டு பண்ணும் கலாட்டாக்களும், சாமி ஆடலும், பாடலும் சுவாரஸ்யம்!.


நச் - டச் என்ற என்ற வசனங்கள், ராம்பிரசாத் சுந்தரின் மிரட்டும் இசை, எம்.குமாரின் காடுகளை நம்கண் முன் நிறுத்தும் ஒளிப்பதிவு உள்ளி்ட்ட ப்ளஸ் பாயிண்டுகள், யுரேகாவின் எழுத்து, இயக்கத்தில் தொப்பியை, சூப்பர் தொப்பியாக, நம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளன என்றால் மிகையல்ல!.


ஆக மொத்தத்தில் தொப்பி ரசிகர்களுக்கு "ஹேப்பி"!.




வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in