Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ஆர்.. ராஜ்குமார் (இந்தி)

ஆர்.. ராஜ்குமார் (இந்தி),R.. Rajkumar(Hindi)
18 டிச, 2013 - 11:03 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆர்.. ராஜ்குமார் (இந்தி)

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com



கோலிவுட் ஆகட்டும், பாலிவுட் ஆகட்டும், கவர்மெண்ட் ஜாப்பை விட ஹீரோக்களுக்கு கவுரமான உத்தியோகம் தாதா கிட்டே அடியாளா வேலை கிடைப்பது. மணிரத்னம் இயக்கிய தளபதி, நாயகன் படங்கள் எத்தனை படங்களுக்கு முன்னோடின்னு கணக்கு எடுத்தா ஏகப்பட்ட படங்கள் வரும். பத்தோட 11 அத்தோட இதுவும் ஒண்ணு தான். பிரபுதேவா இயக்கத்தில், வெளிவந்து கமர்ஷியல் ஹிட் ஆகி விமர்சகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்த ஆர் ராஜ் குமார். அப்டின்னா ரோமியோ ராஜ்குமார். ஆல்ரெடி பிரபுதேவா மிஸ்டர் ரோமியோ எனும் படத்தில் நடிச்சிருக்கார் வேற.

ஹீரோ ஒரு தாதா கிட்டே அடியாளா வேலை செய்யறார். அவருக்கு எதிரி தாதாவோட தங்கை பொண்ணுதான் ஹீரோயின் . அதுல வளர்ப்பு மகள்னு ஒரு சால்ஜாப் வேற. ஹீரோவுக்கு, ஹீரோயினை கண்டதும் காதல் . பின்னாலயே சுத்தறார். ஆனா ஹீரோயின் கண்டுக்கலை. எறும்பு ஊற கல்லும் தேயும் என்ற பழமொழிப்படி ஹீரோயின் ஹீரோ லவ்வுக்கு ஓக்கே சொல்றார் ( ஏன்னா ஹீரோயின் சம்பளம் 40 லட்சம் ஆச்சே ) 2 பேரும் லவ்வுறாங்க.

இப்போதான் பெரிய டுவிஸ்ட். ஆத்துல ஸ்னானம் செய்யும்போது இன்னொரு தாதா, ஹீரோயின் ஸ்னானம் பண்றதை பாத்துடறார். பயப்படாதீங்க, டிரஸ் முழுசா
போட்டுட்டே குளிக்கும்போதுதான். யார்னு விசாரிச்சா எதிரி தாதா தான் ஹீரோயினோட மாமா. உடனே சமாதானத்துக்கு ஆள் அனுப்பி சம்பந்தம் பேசிடறார். இப்போ தான் தெரியுது தன் கிட்டே வேலை செய்யும் ஹீரோ தான், ஆசை வெச்ச பச்சைக்கிளிக்கு முத்துச்சரம்னு. 2 பேருக்கும் கடுமையான போட்டி. யார் ஜெயிச்சாங்க என்பது ஊருக்கே தெரியும், இருந்தாலும் தியேட்டர்ல போய் பார்த்துகுங்க.

ஹீரோவா சாகித் கபூர் , அசால்ட்டா செஞ்சிருக்கார் . இவர் செய்யும் சேட்டைகள், முக சுளிப்புகள் எல்லாமே பிரபுதேவா செய்வது போலவே இருக்கு. டான்ஸ் காட்சிகளில் கலக்கிடுறார். ஃபைட் காட்சிகளிலும் பின்னிபெடல் எடுக்கறார். கமர்ஷியல் சினிமாவுக்கான எல்லா ஐட்டங்களும் படத்துல இருந்தாலும் கொஞ்சமாவது நவீனமா சிந்திச்சு திரைக்கதைல மெருகு ஏத்தி இருக்கலாம்.

ஹீரோயின் சோனாக்ஷி சின்கா.கொழுக் மொழுக் கன்ன அழகி .இவர் ஹீரோவுக்கு முத்தம் கொடுக்கும்போது அவர் உதடுகள் அழுத்தத்தை அளவெடுத்தா பூகம்பம்
ஏற்படும்போது பூமிக்கு ஏற்பட்ட அழுத்தம் தோத்துடும். அம்பூட்டு அழுத்தம். 2 பேருக்கும் சம்பளம் வாங்கிட்டே ரொமான்ஸ் பண்ற வேலை தான். ஆஹா! அருமை.


சோனு சூட் தான் மெயின் வில்லன். பிரகாஷ் ராஜ் கில்லில என்ன என்ன செஞ்சாரோ அதை எல்லாம் இவரும் செய்றாரு. ஹீரோயினைக்கவர இவர் டான்ஸ்
பிராக்டீசில் ஈடுபடுவது காமெடி. ஆனால் இவ்வளவு மந்தியாக ஒரு வில்லன் இருப்பது கமர்சியல் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம்

ஆஷிஸ் வித்யார்த்தி தான் ஹீரோயினுக்கு மாமா. படம் பூரா இவர் மாமா வேலையை நல்ல பார்க்கறார். பல தமிழ்ப்படங்களில் பிரமாதமான நடிப்பை வழங்கிய
இவருக்கு இது ஒரு சறுக்கல் படம்.


இசை சொல்லிக்கொள்ளும்படி இருக்கு. ஹீரோ ஹீரோயின் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் வரும் தீம் மியூசிக் கலக்கல். வசனங்களில் டபுள் மீனிங்க், ஆபாசம் அதிகம் . போக்கிரி மாதிரி படங்களை இயக்கி, ஃபேமிலி ஆடியன்ஸ் உள்ள பிரபுதேவா கொஞ்சம் டீசண்ட்டாக காட்சிகள் அமைப்பது நல்லது.

அண்ணாமலை பட கடவுளே கடவுளே... சீனையும் சுட்டாச்சு. ஹீரோ - ஹீரோயின் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் ஹீரோ, உதட்டைக் குவித்துக்கொண்டு முத்தத்துக்கு ஏங்குவது செம காமெடி.

ஸ்டண்ட் காட்சிகளில் பிரமாண்டம் தெரிகிறது. ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியில் நெஞ்சில், வயிற்றில், முதுகில் என 3 இடங்களில் ஆழமாக கத்திக்குத்துப்பட்ட ஹீரோ, பைட் போட்டு ஜெயிப்பது எல்லாம் ரொம்ப பெரிய காமெடி.

அடிக்கடி ஹீரோ பேசும் “சைலண்ட் ஹோ ஜா. நஹிதோ வயலன்ட் ஹோ ஜாவூங்கா -ஆர் ராஜ்குமார் பஞ்ச் அரதப்பழசு. ஆல்ரெடி விஜய் பேசுனதுதான். தமிழில் நீ
சைலண்ட்டா இரு, இல்ல நான் வயலண்ட் ஆகிடுவேன்.

சி.பி.கமெண்ட் - பிரபு தேவாவின், ஆர்... ராஜ்குமார் = முக்கோண காதல் கதை. சுமாரா இருக்கு, ரொம்ப மோசம் இல்லை. டைம் பாஸ் படம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in