பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த பிப்ரவரி மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ், விமானம மூலம் அடிக்கடி துபாய் சென்று வந்து தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட. இவருக்கு இந்த கடத்தலில் உறுதுணையாக இருந்தவர், இன்னும் சொல்லப்போனால் இந்த கடத்தல் விவகாரத்தில் ரன்யா ராவை ஈடுபடுத்தி அது சம்பந்தப்பட்ட பல நபர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கன்னட நடிகர் ஆன தருண் ராஜ். இவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அதே சமயம் சிறையில் இவருக்கு மெத்தை, டிவி, மொபைல் போன் மற்றும் சிறப்பு உணவு என முறைகேடாக பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, இது குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல ரசிகர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கும் இதுபோன்று முறைகேடான சலுகைகள் வழங்கப்பட்டதால் தான் அவரை வேறு சிறைக்கு மாற்றினார்கள் அதேபோல இந்த சொகுசு வசதி முறைகேடு உறுதி செய்யப்பட்டால் நடிகர் தருண் ராஜும் வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்று போலீசார் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.