பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் பஹத் பாசில் கடந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறிவிட்டார். யாருடைய சாயலும் இல்லாமல் ஒரு வித்தியாசமான நடிப்பை அவர் வழங்கி வருவதால் பல மொழிகளில் உள்ள திரையுலக பிரபலங்கள் கூட அவரது நடிப்புக்கு ரசிகர்களாக மாறி வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் பஹத் பாசிலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அவர் மீடியா ஒன்றில் பேசும்போது, “சமீப வருடங்களாக ஓடிடி தளங்களின் மூலமாக அனைத்து பிராந்திய மொழி படங்களையும் பார்த்து ரசிக்க முடிகிறது. குறிப்பாக மலையாள நடிகரான பஹத் பாசிலை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். அவர் மற்றவர்களிடமிருந்து ஒரு விதிவிலக்கான அற்புதமான நடிகர் என்று சொல்லலாம். அவருடைய ஆவேசம் திரைப்படம் என்னுடைய பேவரைட் படங்களில் ஒன்று. நிச்சயமாக ஒரு நாள் அவருடன் ஒன்றாக இணைந்து நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.