2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

அமீர்கான் நடிப்பில் கடந்த 2001ல் ஹிந்தியில் வெளியான படம் லகான். கிராமத்தில் உள்ள இளைஞர்கள், கிரிக்கெட் பற்றி எதுவுமே அறிந்திராத நிலையில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெல்வது தான் இந்த படத்தின் கதை. அசுதோஷ் கோவரிகர் இயக்கிய இந்த படத்தில் கிரேசி சிங் என்பவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இன்னொரு கதாநாயகியாக லண்டனைச் சேர்ந்த எலிசபெத் என்பவர் ரேச்சல் என்கிற ஆங்கிலேயப் பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தில் இவர் அமீர்கான் உள்ளிட் அவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பவராகவும் அவரை ஒருதலையாக காதலிப்பவராகவும் நடித்து இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தொடர்ந்து அவர் இங்கே வேறு எதுவும் படங்களில் நடிக்கவில்லை. இந்த படம் வெளியாகிய 22 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது எலிசபத் மீண்டும் இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்த முறை இவர் நடிக்க உள்ளது கோஹ்ரா என்கிற வெப் சீரிஸ் ஒன்றில் தான்.
புலனாய்வு திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெளிநாட்டு பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக படக்குழுவினர் குறிப்பிட்ட வயதுள்ள பெண்ணை தேடியபோது தான் அவர்களுக்கு லகான் படத்தில் நடித்த எலிசபெத் ஞாபகத்திற்கு வந்துள்ளார். ஏற்கனவே அவர் ஹிந்தியில் நடித்திருப்பதால் மீண்டும் இங்கே நடிப்பது அவருக்கு சுலபமாக இருக்கும் என்பதால் அவரையே அழைத்து நடிக்க வைத்துள்ளனர்.