'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்ற படம் தயாராகி இன்று (டிச 24) வெளியாகி உள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் வெளியாகி உள்ளது.
இதில் கேப்டன் கபில்தேவ்வாக ரன்வீர் சிங் நடித்துள்ளார், ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளார். கபில்தேவ் மனைவியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்தில் உலக கோப்பை கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு உரிமத் தொகையாக படத் தயாரிப்பு தரப்பில் இருந்து 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்காவிட்டாலும், படத் தயாரிப்பு இந்த பரிசை அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது. இதில் கேப்டன் கபில்தேவுக்கு மட்டும் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா 83ல் உலக கோப்பையை வென்றபோது வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கிய சம்பளம் 2100 ரூபாய் தான். மொத்த அணிக்கும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 83 படத்தின் மூலம் அவர்களுக்கு 15 கோடி கிடைத்துள்ளது. ஒரு வெற்றி காலம் கடந்தும் அதற்கான பலனை கொடுத்துக் கொண்டிருக்கும் என்று படத்தில் ஒரு வசனம் வரும். அது இப்போது உண்மையாகி உள்ளது.