பயோடேட்டா
- ராஜாதி ராஜா - இசைஞானி இளையராஜா அன்னக்கிளி முதல்ஆயிரம் வரை...! தமிழ் சினிமா இசை உலகில் தனக்கென தனி சகாப்தத்தை உருவாக்கியவர் 'இசைஞானி' இளையராஜா. கிராமிய இசை, மேற்கத்திய கிளாசிக், கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை.... என அனைத்து விதமான இசைகளையும் சினிமா பாடல்களில் பயன்படுத்தி, வெற்றி கண்டவர். தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்து, 'என்றும் ராஜா'வாக, 'ராஜாதி ராஜா'வாக திகழும் இளையராஜாவை, தமிழ் சினிமா இசை கலைஞர்கள் விழா எடுத்து கொண்டாடுகின்றனர். இந்த கொண்டாட்டத்தில் 'தினமலர்' மகிழ்ச்சி கொள்கிறது. மேலும் »--> செய்திகள் 01 ஜன,1970 - 05:30 IST மேலும் படிக்க --> வீடியோ 01 ஜன,1970 - 05:30 IST --> தமிழ் + தேன் + பால் = இளையராஜாபிரபலமான பாடல்கள் மேலும் » போட்டோ கேலரி 01 ஜன,1970 - 05:30 IST --> 200 ஸ்ஸ்ஸ்வாரசிய தகவல்கள் அவரது இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். 1943ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்தார். சொந்த ஊர் தேனி மாவட்டம், பண்ணைபுரம்.
- மனைவி பெயர் ஜீவா ( சொந்த சகோதரியின் மகள்). பெற்றோர் பெயர் டேனியல் ராமசாமி
- சின்ன தாயம்மாள். அவரது சகோதரர்கள் பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்). குழந்தைகள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி.
- முதல் படம் அன்னக்கிளி. தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகம் செய்யப்பட்டார்.
- இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். இளையராஜாவின் தந்தைக்கு 25 ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது.


