பயோகிராபி

பயோடேட்டா
- இயற்பெயர்
- கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா
- சினிமா பெயர்
- கே எஸ் சித்ரா
- புனைப்பெயர்
- "சின்னக் குயில்"
- பிறப்பு
- 27-ஜுலை-1963
- பிறந்த இடம்

சின்னக் குயில்

"சின்னக் குயில்" சித்ரா அவர்களின் போட்டோ தொகுப்புகள்


























கேரளாவை பிறப்பிடமாகக் கொண்ட பின்னணிப் பாடகி சித்ராவின் தந்தை கிருஷ்ணன் நாயர் வானொலிப் பாடகராகவும், தாயார் சாந்தகுமாரி சிறந்த வீணை இசைக் கலைஞராகவும் இருந்தபடியால், நல்ல இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த சித்ராவிற்கு சிறுவயதிலேயே இசையின் மீது தாக்கம் அதிகமிருந்தது.
தனது ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் பாடியும் உள்ளார். இவரது தந்தை கிருஷ்ணன் நாயரே இவருக்கு முதல் இசை குருவாகவும், ஆசானாகவும் இருந்திருக்கின்றார். பள்ளிப் பருவத்திலேயே பின்னணிப் பாடகர் கே ஜே ஏசுதாஸ் உடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்ற சித்ரா, 1979 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்பட இசை அமைப்பாளர் எம் ஜி ராதாகிருஷ்ணன் மூலம் திரைப்படத்தில் பின்னணிப் பாடும் வாய்ப்பு பெற்று தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார்.
இசைத் துறையில் பி ஏ இளங்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற சித்ரா, கேரள பல்கலைக்கழகத்தில் தனது எம் ஏ முதுகலையிலும் தேர்ச்சி பெற்றார். ரவீந்திரன், ஷியாம், ஜெர்ரி அமல்தேவ், கண்ணனூர் ராஜன் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல மலையாளத் திரைப்படங்களில் பாட வாய்ப்பு கிடைத்து பாடவும் செய்தார்.
1986 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் இசையில், ஆர் செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த "நீதானா அந்தக் குயில்" திரைப்படத்தில் "பூஜைக்கேத்த பூவிது" என்ற பாடலை பாடியதன் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்து வைக்கப் பட்டார்.
இதனைத் தொடர்ந்து கீதாஞ்சலி, "பூவே பூச்சூடவா", "சிந்து பைரவி" என இளையராஜாவின் இசையில் பல தேனினும் இனிய பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்ததோடு "சின்னக்குயில்" சித்ரா என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டார். "சிந்து பைரவி" திரைப்படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்", "நானொரு சிந்து காவடி சிந்து" ஆகிய பாடல்களை சிறப்பாக பாடியதற்காக இதே ஆண்டில் "தேசிய விருது" வழங்கியும் கௌரவிக்கபட்டுள்ளார்.
இசை அமைப்பாளர் கே வி மகாதேவன் இசையமைத்த "பிரளயம்" என்ற திரைப்படத்தின் வாயிலாக பின்னணிப் பாடகியாக தெலுங்கு திரையுலகிற்கும் அறிமுகமானார். கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், வி குமார், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார், மரகதமணி, மணிஷர்மா, சிற்பி, பரத்வாஜ், ஆதித்யன், பாலபாரதி, யுவன் சங்கர் ராஜா என தமிழிலும், நதீம் ஷ்ரவண், அனுமாலிக், ராஜேஷ் ரோஷன், நிகில் வினய் என ஹிந்தியிலும் இவர் பின்னணிப் பாடாத இசையமைப்பாளர் களே இல்லை எனும் அளவிற்கு, தென்னிந்திய மொழிகளன்றி ஹிந்தி, பெங்காளி, ஒரியா, குஜராத்தி, துளு, பஞ்சாபி, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா எனவும் சிங்களம், மலாய், அரபு, லத்தீன், ஆங்கிலம் மற்றும் ஃப்ரஞ்ச் என்று அயல்நாட்டு மொழிகளிலும் ஏறத்தாழ 25000க்கும் மேல் பாடல்களைப் பாடி தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் 'சின்னக்குயில்' சித்ரா.