Advertisement

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Birthday
04 Jun 1966 (Age )

இந்திய சினிமாவின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் 1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிறந்தவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுலா பாலசுப்ரமணியன். எஸ்.பி.பி.யின் தந்தை ஒரு இசை கலைஞர். இதனால் அவருக்கும் இசை மீது ஆர்வம் உண்டானது. இளம் வயதிலேயே புல்லாங்குழல், ஆர்மோனியம் போன்ற இசை கருவிகளில் கைதேர்ந்தவர். இதற்காக இவர் விருது பெற்றுள்ளார். 1966ம் ஆண்டு பின்னணி பாடகராக அறிமுகமானார். சாந்தி நிலையம் படத்தில், இயற்கை எனும் இளையகன்னி பாடல் தான் இவர் பாடிய முதல் தமிழ் பாடல். தொடர்ந்து தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். பாடகராக மட்டுமல்லாது இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார் எஸ்.பி.பி.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 40 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை எஸ்.பி.பி. வாங்கியிருக்கிறார். எஸ்.பி.பி., சாவித்திரி என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு பல்லவி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் எஸ்.பி.பி சரண் பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in