Birthday
07 Apr 1935 (Age )
தமிழ் சினிமாவில் அதிக ஹிட்டுகளை கொடுத்த கமர்சியல் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 1935ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி பிறந்த எஸ்.பி.முத்துராமன், கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், திரிலோகசந்தர் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு, ''கனிமுத்து பாப்பா'' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் ரஜினி, கமலை வைத்து அதிக முறை படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக கமலை காட்டிலும் ரஜினியை வைத்து நிறைய கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சுமார் 75 படங்களை இயக்கியுள்ளார் எஸ்.பி.முத்துராமன். பிலிம் பேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.