Advertisement

தமிழ் சினிமாவை ஏணியில் ஏற்றிய ஏவிஎம்.,

பயோகிராபி

AVM Meiyappan biography

Advertisement

  • இயற்பெயர் - ஆவிச்சி மெய்யப்ப செட்டியார்
  • சினிமா பெயர் - ஏ வி மெய்யப்ப செட்டியார்
  • பிறப்பு - 28 - ஜுலை - 1907
  • இறப்பு - 12 - ஆகஸ்ட் - 1979
  • பிறந்த இடம் - காரைக்குடி - தமிழ்நாடு
  • சினிமா அனுபவம் - 1934 - 1973
  • பணி- தயாரிப்பாளர் - இயக்குநர்
  • துணைவி - அலமேலு மெய்யப்பன் - ராஜேஸ்வரி மெய்யப்பன்
  • குழந்தைகள் - ஏ.வி.எம்.பழனியப்பன் (மகன்-இறப்பு), லக்ஷ்மி (மகள்-இறப்பு), வள்ளி (மகள்-இறப்பு), சரஸ்வதி,- முத்து -ருக்மணி (மகள்கள்), ஏ.வி.எம்.முருகன் (மகன்-இறப்பு), ஏ.வி.எம்.குமரன், ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியன் (மகன்கள்), மீனா வீரப்பன் (மகள்)
  • பெற்றோர் - ஆவிச்சி செட்டியார் - லக்ஷ்மி ஆச்சி
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கே மகனாக பிறக்க வேண்டும் : ஏ.வி.எம்.சரவணன் ஆசை

இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து, பல மொழிகளில் ஏராளமான படங்களை தயாரித்து, தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்று வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.

வீடியோ

ஏ.வி.எம்., – இந்திய சினிமாவின் காவியம்

Advertisement

விருதுகள்

1954 ஆம் ஆண்டு தமிழில் 2வது சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" "அந்த நாள்" திரைப்படத்திற்கும், கன்னடத்தில் சிறந்த படத்திற்கான முதல் பரிசை "பேடர கண்ணப்பா" படத்திற்காகவும் கொடுக்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த படத்துக்கான "தேசிய விருது" ஏ வி எம் தயாரித்த "குல தெய்வம்" திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான "தேசிய விருது" ஏ வி எம் மின் "களத்தூர் கண்ணம்மா" திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

1961 ஆம் ஆண்டு தமிழில் 2வது சிறந்த திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் தயாரித்த "பாவமன்னிப்பு" திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.

Advertisement

1986 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த ஜனரஞ்சக திரைப்படத்திற்கான "தேசிய விருது" ஏ வி எம் மின் "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டது.

1968 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான "தமிழ்நாடு அரசு சினிமா விருது" ஏ வி எம் மின் "உயர்ந்த மனிதன்" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

மேலும் விருதுகள் »

Advertisement

போட்டோ

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்களின் போட்டோ தொகுப்புகள்

துளிகள்

ஏ.வி.எம். தயாரித்த பட ஸ்டில்கள்

Left Quote "சரஸ்வதி சவுணட் புரொடக்ஷன்ஸ்" சார்பில் வெளிவந்த "அல்லி அர்ஜுனா", "ரத்னாவளி" என்ற முதல் இரண்டு படங்களில் கேமராவில் பிலிம் ஓடிய வேகத்திற்கும், ஒலிப்பதிவு எந்திரத்தில் ஒலி பதிவான வேகத்திற்கும் நிறைய வேறுபாடு இருந்ததால் நடிகர்களின் வாயசைப்பு முன்னால் வர, வசனம் பின்னால் வருவதை அறிந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அப்போது தான் முதன் முதலாக சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை நிறுவ தீர்மானித்தார். Right Quote

Left Quote 1940 ஆம் ஆண்டு மைலாப்பூர், கபாலி தியேட்டர் அருகில் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மற்றும் அவரது பங்கு தாரர்களால் உருவாக்கப்பட்ட முதல் சொந்த தயாரிப்பு நிறுவனம்தான் "பிரகதி ஸ்டூடியோ". Right Quote

Left Quote பிரகதி ஸ்டூடியோவில் தயாரித்து மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்த முதல் திரைப்படம் "பூகைலாஸ்" என்ற தெலுங்கு திரைப்படமாகும். Right Quote

Left Quote ஏ.வி.எம் தயாரித்த "ஓர் இரவு" திரைப்படத்தின் 300 பக்கங்கள் கொண்ட திரைக்கதையை ஒரே இரவுக்குள், எழுதி முடித்துக் கொடுத்தார் சி.என்.அண்ணாதுரை. இயக்குநர் ப.நீலகண்டன் இயக்குநரானதும் இப்படத்தின் மூலமே. Right Quote

Left Quote "நாம் இருவர்", "வேதாள உலகம்", வாழ்க்கை" ஆகிய படங்களின் சென்னை நகர வினியோகஸ்தராக இருந்த பி.ஏ.பெருமாள், ஏ.வி.மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து தயாரித்த திரைப்படம் தான் "பராசக்தி". நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலமே. Right Quote

Advertisement

வரலாறு

AVM Meiyappan history

Advertisement

ஏவிஎம்.,ன் வேர் மெய்யப்ப செட்டியார்

 

இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தான் தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து ஏராளமான படங்களை இந்தியாவின் பல மொழிகளில் தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.

 

தமிழ் திரையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படுபவர் இவர். (மற்ற இருவர் எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத்). தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்றதோடு மட்டுமின்றி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கலைப் பொக்கிஷத்தை தனது "பராசக்தி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய திரைமேதை ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.

 

1932 ஆம் ஆண்டு "சரஸ்வதி ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் தனது நண்பரோடு இணைந்து புராணக் கதைகளைக் கொண்ட ஒலிப்பதிவுகளை விற்பதோடு தயாரிக்கவும் செய்தார். பின்னர் பேசும் படங்களின் வருகையைத் தொடர்ந்து "சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ்" என்ற கம்பெனியை தொடங்கினார்.

 

1935 ஆம் ஆண்டு தனது முதல் படைப்பாக "அல்லி அர்ஜுனா" என்ற திரைப்படத்தை தயாரித்தார். பின்னர் சொந்தமாக தங்களுக்கென ஒரு ஸ்டூடியோ ஒன்றை சென்னையில் ஆரம்பிக்க தனது பங்குதாரர்களோடு தீர்மானித்து, 1940ல் உருவானதே "பிரகதி ஸ்டூடியோ". நந்தகுமார், "போலி பாஞ்சாலி", "வாயாடி", முதல் தெலுங்கு தயாரிப்பான "பூ கைலாஸ்", "சபாபதி", முதல் கன்னட தயாரிப்பான வசந்த சேனா "என் மனைவி", "ஸ்ரீவள்ளி" என அனைத்துப் படங்களும் பிரகதி ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்டவை. "ஸ்ரீவள்ளி" திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பின் பங்குதாரர்கள் "பிரகதி ஸ்டூடியோவை" விற்க முற்பட, இனி யாருடனும் கூட்டு சேராமல் நாமே இதனை திறம்பட செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.

 

காரைக்குடி நகரத்திற்கு வெளியே, தேவகோட்டை ரஸ்தாவில் அமைந்திருந்த ஒரு நாடக கொட்டகையையும், அதனை சுற்றியுள்ள காலி இடத்தையும் மாத வாடகைக்கு பிடித்து தனது படப்பிடிப்பு தளமான ஏ.வி.எம் என்ற அந்த ஆலமரத்தின் விருட்சத்தை அங்கே தான் முதன் முதலில் விதைத்தார். அங்கே உருவான முதல் திரைப்படம் 1947ல் வெளிவந்த "நாம் இருவர்". இதனைத் தொடர்ந்து 1948ல் வேதாள உலகம் என்ற திரைப்படத்தையும் இங்கேயே தயாரித்து வெளியிட்டார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சினிமா வட்டாரத்தில் பெரும் மதிப்பையும், நற்பெயரையும் ஈட்டித்தந்தது.

 

1980களுக்கு பின்னும் வெற்றிப்பாதையில் ஏ.வி.எம்.,

இந்தியாவின் பல மொழிகளில் தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். விதையாக இருந்து ஏ.வி.எம்., எனும் விருட்சமாய் வளர்ந்தது இவரால் தான். 1972க்குப் பிறகு தமிழ் திரைப்படங்களை தயாரிக்காமல் இருந்த ஏ.வி.எம் நிறுவனம், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மறைவிற்குப் பின் அவரது புதல்வர்களான எம்.குமரன், எம்.பாலசுப்ரமணியம், எம்.சரவணன் தங்களது தந்தையின் சீறிய பணியை செவ்வனே எடுத்து...

பட ஸ்டில்கள்

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்களின பட ஸ்டில்கள்