அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

நடிகர் அஜித்தின் 60வது படம் வலிமை. வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியான அப்டேட்டுகளால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
படப்பிடிப்பின் இறுதிக்கட்டப் பணிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும் வாரத்துக்கு ஒரு அப்டேட் வீதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வலிமை படத்தின் டீசர் ரிலீசுக்கு முன்பாக, படத்திலிருந்து 2 சிங்கிள் பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அஜித் மதுரையில் ஆடி பாடும் ஓபனிங் பாடலும், ஒரு குடும்ப செண்டிமெண்ட் பாடலும் வெளியிட உள்ளனர். இவற்றுக்கான இறுதிக்கட்ட இசைக் கோர்ப்பு பணிகளில் இருக்கிறாராம் யுவன்.
ஆயுத பூஜை பண்டிகைக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சில மாதங்களே இருப்பதால் இனி, வாராவாரம் வலிமை அப்டேட்டை கொடுப்பதென முடிவில் இருக்கிறார்களாம்.